அக்கரைப்பற்று பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், அங்குள்ள இரவு நேர உணவகங்கள் மற்றும் உணவு கையாளும் நிறுவனங்கள் நேற்று இரவு அதிரடிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீ சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைவாக, அக்கரைப்பற்று சுகாதார மருத்துவ அதிகாரி எம்.ரீ. ஜாரியா தலைமையில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மொத்தம் 28 உணவகங்கள் விரிவாகச் சோதனை செய்யப்பட்டன. குறிப்பாகச் சமையலறைகள், உணவுத் தயாரிப்பு இடங்கள் மற்றும் களஞ்சிய அறைகளின் தூய்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
குறித்த சோதனையின் போது மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற முறையிலும், சுகாதாரச் சீர்கேடான நிலையிலும் வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான உணவுகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டன.
அத்துடன், சுகாதார விதிகளை மிகவும் மோசமான முறையில் மீறிச் செயற்பட்ட 07 உணவக உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய உணவக உரிமையாளர்களுக்கு உணவுப் பாதுகாப்பு நடைமுறைகள், சமையலறை பராமரிப்பு மற்றும் தூய்மையான சூழலைப் பேணுவது குறித்துத் தெளிவான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வாறான தொடர்ச்சியான சோதனைகள் முன்னெடுக்கப்படும் எனச் சுகாதார அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

Latest News
மே தினப் பேரணிகளைத் தவிர்க்கும் முக்கிய கட்சிகள்: மக்கள் செல்வாக்கை நிரூபிக்கப் போவது யார்?
Local
30 April 2026
இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் 'ஆயுஷ்' புலமைப்பரிசில் - விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது
Local
30 April 2026
நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் உயிரிழப்பு
Local
30 April 2026
ஆர்டெமிஸ் II விண்வெளி வீரர்கள் ட்ரம்ப்புடன் சந்திப்பு - விண்வெளி மற்றும் உலக அரசியல் குறித்து கலந்துரையாடல்
Local
30 April 2026
உண்மையில் விஜய்யின் தவெக 120 இடங்களில் வெல்லுமா? - இதற்குமுன் ஆக்சிஸ் மை இந்தியாவின் கணிப்புகள் எப்படி?
Local
30 April 2026
ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!
Local
30 April 2026
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய சவால் - அணித் தலைவரால் அனைத்து ஐ.பி.எல். வீரர்களுக்கும் சிக்கல்
Local
30 April 2026
பிரான்ஸ் கார் பந்தய களத்தில் அஜித் - வைரலாகும் காணொளி
Local
30 April 2026
முருங்கை மரத்தின் புதியதொரு அதிசயம் : பிளாஸ்டிக் துகள்களை அழிக்கும் விதைகளைப் பற்றித் தெரியுமா?
Local
30 April 2026
ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 5.4 சதவீதமாக அதிகரிப்பு
Local
30 April 2026