General30 April 2026

நிம்மதி நீடிக்கவில்லை : நண்பகல் வரை குறைந்திருந்த தங்கம் மீண்டும் உயர்வு - தற்போதைய முழு விபரம் இதோ!

இலங்கையில் இன்று காலை முதல் சற்றே குறைந்திருந்த தங்கத்தின் விலை, நண்பகலுக்குப் பின்னர் மீண்டும் 2,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று காலை சற்று வீழ்ச்சியடைந்திருந்தது. இது நுகர்வோர் மத்தியில் ஒரு தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது மீண்டும் விலை உயர்வு பதிவாகியுள்ளது.

அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கத்தின் அறிவிப்பின்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 360,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,075 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியிலும், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் சர்வதேச ரீதியில் தங்கத்திற்கான கேள்வியில் (Demand) ஏற்பட்டுள்ள மாற்றங்களே உள்நாட்டிலும் இந்த விலைஅதிகரிப்புக்கு காரணம் எனச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes