போர்த்துகல் நாட்டில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய செயற்கை ஏரியான அல்கேவா (Lake Alqueva) பகுதியில், மனிதர்களுக்கு தோல் நோயை ஏற்படுத்தக்கூடிய புதிய வகை ஒட்டுண்ணி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
'ட்ரைக்கோபில்ஹார்சியா பிராங்கி' (Trichobilharzia franki) என அழைக்கப்படும் இந்த ஒட்டுண்ணி, பொதுவாக நீர்வாழ் பறவைகள் மற்றும் நத்தைகளை வாழ்விடமாகக் கொண்டவை.
எனினும், இவை ஏரி நீரில் நீந்துபவர்களின் தோலில் ஊடுருவி, கடுமையான அரிப்பு மற்றும் தடிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய 'ஸ்விம்மர்ஸ் இட்ச்' (Swimmer’s itch) எனும் பாதிப்பை உருவாக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இவை ஏரி நீரில் நீந்துபவர்களின் தோலில் ஊடுருவி, கடுமையான அரிப்பு மற்றும் தடிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய 'ஸ்விம்மர்ஸ் இட்ச்' (Swimmer’s itch) எனும் பாதிப்பை உருவாக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட விசேட கள ஆய்வுகளின் போது, அங்குள்ள நத்தைகளில் இந்த ஒட்டுண்ணிகள் இருப்பது மரபணு சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இடம்பெயரும் பறவைகள் மூலமாகவே இந்த ஒட்டுண்ணிகள் போர்த்துகல்லுக்கு பரவியிருக்கலாம் என ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது அல்கேவா ஏரிப் பகுதியில் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நீர் நிலைகளில் இறங்கும் போது அவதானமாக இருக்குமாறு அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Latest News
நாளை வானிலையில் இடம்பெறவுள்ள மாற்றம்
Local
30 April 2026
மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்
Local
30 April 2026
செம்மணியில் தொடரும் அகழ்வுப்பணிகள் - வெளிப்பட்ட ஒரு மனித என்புக்கூடு
Local
30 April 2026
விண்வெளியில் இருந்து தெரிந்த அமேசான்: நாசா விண்வெளி வீராங்கனை வெளியிட்ட பிரமிக்கத்தக்க புகைப்படம்!
Local
30 April 2026
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
Local
30 April 2026
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய ஒழுங்கு விதிகள்!
Local
30 April 2026
மஸ்கெலியா பிரதேச மருத்துவமனையில் உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு: வெளிநோயாளர் பிரிவு ஸ்தம்பிதம்!
Local
30 April 2026
பாகிஸ்தானில் கடும் எரிபொருள் நெருக்கடி - இக்கட்டான நிலையில் அரசாங்கம்!
Local
30 April 2026
தடைகளைத் தகர்க்கும் ஈரானின் 'நிழல் கப்பற்படை': ஹோர்முஸ் நீரிணையில் நடத்திய அதிரடி புலனாய்வு!
Local
30 April 2026
சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய இணையவழிப் பதிவு முறை - அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அதிரடி நடவடிக்கை!
Local
30 April 2026