எகிப்தின் ஆக்ஸிரைஞ்சஸ் (Oxyrhynchus) என்ற பண்டைய நகரில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், மம்மி ஒன்றின் அடிவயிற்றில் ஹோமரின் "இலியட்" (Iliad) காவியத்தின் ஒரு பகுதி ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
இது போன்ற ஒரு கண்டுபிடிப்பு நிகழ்வது இதுவே முதல் முறையாகும்.
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் இருந்து தெற்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அல் பஹ்னாசா (Al Bahnasa) எனும் நவீன நகரத்தில் இந்த மம்மி கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான இந்த மம்மி, எகிப்தின் ரோமானிய காலத்தைச் சேர்ந்தது என்று பார்சிலோனா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக இந்தப் பகுதிகளில் கண்டெடுக்கப்படும் மம்மிகளில் சடங்கு முறைகளுக்கான மந்திரங்கள் அடங்கிய பாப்பிரஸ் தாள்கள் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு இலக்கிய உரை கண்டெடுக்கப்பட்டது இதுவே முதல் முறை எனப் செவ்வியல் மொழி அறிஞர் இக்னாசி-சேவியர் அடிகோ தெரிவித்துள்ளார்.
மம்மியின் அடிவயிற்றில் ஒட்டப்பட்டிருந்த பாப்பிரஸ் தாள் சிதைந்த நிலையில் இருந்தாலும், அது கிரேக்க காவியமான "இலியட்" இரண்டாம் புத்தகத்தில் உள்ள 'கப்பல்களின் பட்டியல்' (Catalogue of Ships) எனும் பகுதியாகும் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
மம்மியின் உடல் மீது இந்த இலக்கியப் பாப்பிரஸ் ஏன் ஒட்டப்பட்டது என்பது குறித்து தற்போது முதற்கட்ட ஆராய்ச்சிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன.
மம்மியைப் பதப்படுத்தியவரின் ஒரு அடையாளச் சின்னமாகவோ அல்லது உடலுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சடங்கின் ஒரு பகுதியாகவோ இது இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதே அகழ்வாராய்ச்சியில் சுண்ணாம்புக்கல்லால் ஆன மூன்று கல்லறைகளில் பல மம்மிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவற்றில் மூன்று மம்மிகளின் நாக்குகளில் தங்கத் தகடுகளும், மற்றொரு மம்மியின் நாக்கில் செப்புத் தகடும் வைக்கப்பட்டிருந்தன.
மேலும், ஒரு அறையில் எரிக்கப்பட்ட பெரியவர் ஒருவரின் எச்சங்கள், ஒரு கைக்குழந்தையின் எலும்புகள் மற்றும் பூனை இன விலங்கின் தலை ஆகியவற்றைக் கொண்ட ஒரு பெரிய ஜாடியும் கண்டறியப்பட்டுள்ளது என CNN செய்தி வெளியிட்டுள்ளது.
Latest News
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
Local
01 May 2026
உழைப்பின் மாண்பையும் உரிமைகளையும் போற்றும் 'சர்வதேச தொழிலாளர் தினம்'
Local
01 May 2026
உங்களுக்குத் தெரிந்த ரஹிமாவாக இருக்கலாம்! - வெளிவிவகார அமைச்சின் அவசர வேண்டுகோள்!
Local
01 May 2026
அமெரிக்க விசா வேண்டுமா? – இனி 'நோ' (No) என்று சொன்னால் தான் அனுமதி!
Local
01 May 2026
ஜனவரியில் தெரிந்த ஆபத்து.. மார்ச்சில் உறுதி செய்த அதிகாரிகள்! – திறைசேரியின் அலட்சியம் அம்பலம்
Local
01 May 2026
முன்னாள் ஜனாதிபதி மீது பாயும் குற்றச்சாட்டுகள் - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மர்மம் விலகுகிறதா?
Local
01 May 2026
மம்மியின் அடிவயிற்றில் ஒட்டப்பட்டிருந்த பொக்கிஷம்!
Local
01 May 2026
பௌத்த பிக்குகளுக்கு வெளிநாடு செல்ல கடும் கட்டுப்பாடு!
Local
01 May 2026
பழைய கட்டிடங்களில் பேய் நடமாட்டமா? – கனடா ஆராய்ச்சியாளர்களின் அதிரடி கண்டுபிடிப்பு!
Local
01 May 2026
கேரளாவில் தங்கம் அணிந்த பாம்பு சிக்கிய சுவாரஸ்யக் கதை!
Local
01 May 2026