முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்; ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தாக்குதல்கள் குறித்த உளவுத்துறை தகவல்கள் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, அப்போதைய பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளின் தளபதியாகவும் இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு இந்த உளவுத்துறை தகவல்கள் தெரிந்திருந்ததாக ஹேமசிறி பெர்னாண்டோ வலியுறுத்தினார்.
அரச புலனாய்வு சேவையின் அப்போதைய தலைவர் நிலந்த ஜயவர்தனவிற்கும் இந்தத் தகவல்கள் தெரிந்திருந்ததாகவும், அவர் அதனை மறைக்கச் செயல்பட்டதாகவும் பெர்ணான்டோ குற்றம்சாட்டினார்.
தாக்குதல்களைத் தடுப்பதில் கடமையைப் புறக்கணித்ததாகத் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், உரிய தகவல்கள் முறையாக ஆராயப்படவில்லை என்றும், பொறுப்பாளர்கள் இன்னும் சுதந்திரமாக செயற்படுவதாகவும்; தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் உளவுத்துறை எச்சரிக்கைகள் இருந்தபோதிலும் செயல்படத் தவறியதன் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு 2023 ஜனவரி மாதம் 100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதே வழக்கில் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு 50 மில்லியன் ரூபா இழப்பீடு விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையிலர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள கட்டமைப்பு குறைபாடுகள் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விசாரணைகளை மீளவும் தீவிரப்படுத்தி வருவதுடன், அண்மையில் முன்னாள் புலனாய்வு அதிகாரி சுரேஷ் சல்லேயும்; கைது செய்யப்பட்டுள்ளார்.
Latest News
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
Local
01 May 2026
உழைப்பின் மாண்பையும் உரிமைகளையும் போற்றும் 'சர்வதேச தொழிலாளர் தினம்'
Local
01 May 2026
உங்களுக்குத் தெரிந்த ரஹிமாவாக இருக்கலாம்! - வெளிவிவகார அமைச்சின் அவசர வேண்டுகோள்!
Local
01 May 2026
அமெரிக்க விசா வேண்டுமா? – இனி 'நோ' (No) என்று சொன்னால் தான் அனுமதி!
Local
01 May 2026
ஜனவரியில் தெரிந்த ஆபத்து.. மார்ச்சில் உறுதி செய்த அதிகாரிகள்! – திறைசேரியின் அலட்சியம் அம்பலம்
Local
01 May 2026
முன்னாள் ஜனாதிபதி மீது பாயும் குற்றச்சாட்டுகள் - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மர்மம் விலகுகிறதா?
Local
01 May 2026
மம்மியின் அடிவயிற்றில் ஒட்டப்பட்டிருந்த பொக்கிஷம்!
Local
01 May 2026
பௌத்த பிக்குகளுக்கு வெளிநாடு செல்ல கடும் கட்டுப்பாடு!
Local
01 May 2026
பழைய கட்டிடங்களில் பேய் நடமாட்டமா? – கனடா ஆராய்ச்சியாளர்களின் அதிரடி கண்டுபிடிப்பு!
Local
01 May 2026
கேரளாவில் தங்கம் அணிந்த பாம்பு சிக்கிய சுவாரஸ்யக் கதை!
Local
01 May 2026