இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் யகுத்கஞ்ச் கிராமத்தில் நடைபெற்ற குடும்ப விழாவொன்றின்போது, உறவினர் ஒருவர் 9 வயது சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற பெயர் சூட்டும் விழாவில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
அந்த விழாவில் கலந்துகொண்டிருந்த மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் உறவினர் ஒருவர் அங்கிருந்த 9 வயது சிறுவனிடம் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வருமாறு கேட்டுள்ளார்.
எனினும், சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த குறித்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சிறுவன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவனை உடனடியாக மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அலிகார் நகரில் உள்ள மருத்துவமனைக்குச் சிறுவன் கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படும் நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காகக் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Latest News
இலங்கை மற்றும் சவூதி இடையே கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை!
Local
20 September 2026
வீட்டுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் புதிய முறைமை - காத்திருப்புப் பட்டியலைக் குறைக்க நடவடிக்கை! - ஜனாதிபதி
Local
20 September 2026
பாடசாலைகளை நடத்துவது குறித்துத் தீர்மானிக்க மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அதிகாரம்!
Local
20 September 2026
அதிகூடிய மழைவீழ்ச்சி நாவலப்பிட்டியில் பதிவு!
Local
20 September 2026
இந்த வருடத்தில் 121,000 பேருக்கு அரச தொழில் வாய்ப்பு : ஜனாதிபதி அறிவிப்பு
Local
20 September 2026
24 H பார்சிலோனா கார் பந்தயம்: அஜித்தின் ‘RedAnt Racing’ அணி 2 ஆம் இடம் பிடித்து வெற்றியைப் பதிவு செய்தது!
Local
20 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு சபாநாயகரிடம் ஒப்படைப்பு!
Local
20 September 2026
டிசம்பரில் நடைபெறுகிறது ஐபிஎல் 2027 ஏலம்: மைதானம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை!
Local
20 September 2026
இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் இவற்றையே செய்தது! அமைச்சர் சரோஜா பதில்!
Local
20 September 2026
சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தாலும் ஒக்டோபரிலும் எரிபொருள் விலைக் கட்டுப்பாடு தொடரும்- ஜனாதிபதி
Local
20 September 2026