கடந்த 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் பூமியின் இரவு நேர வெளிச்சம் 16% அதிகரித்துள்ளது.
செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததன் மூலம் கனெக்டிகட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த அதிகப்படியான வெளிச்சம் வெறும் கண்களுக்குத் தெரியும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது .
மனித ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் தூக்கத்தைத் தூண்டும் மெலடோனின் (Melatonin) ஹார்மோன் சுரப்பதைப் பாதிக்கும்.
வனவிலங்குகளில் இடம்பெயரும் பறவைகள், கடல் ஆமைகள் மற்றும் இரவு நேர விலங்குகளின் இயல்பான சுழற்சியைத் திசைதிருப்புகிறது அதேபோன்று அதிக வெளிச்சத்தின் காரணமாக விண்வெளி ஆய்வாளர்கள் தொலைநோக்கிகள் மூலம் நட்சத்திரங்களையும் கோள்களையும் தெளிவற்ற முறையில் பார்க்க நேரிடுகிறது.
2022-ஆம் ஆண்டு கணக்கின்படி, உலகிலேயே அதிக இரவு நேர வெளிச்சம் கொண்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து: சீனா, இந்தியா ,கனடா, பிரேசில் போன்ற நாடுகள் காணப்படுகின்றன.
உலகளவில் வெளிச்சம் அதிகரித்தாலும், போர் அல்லது இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் வெளிச்சம் குறைந்துள்ளது.
இது அந்தப் பகுதிகளின் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது.
தேவையற்ற இடங்களில் விளக்குகளை அணைப்பது, ஒளியை வானத்தை நோக்கிச் சிதறவிடாமல் தரையை நோக்கி மட்டும் செலுத்தும் 'Shielded Lights' பயன்படுத்துவது மற்றும் குறைவான நீல ஒளி (Blue light) கொண்ட மின்விளக்குகளைப் பயன்படுத்துவது ஓரளவுக்கு மாற்றத்தைக் கொண்டு வரும்.
இயற்கையான இருட்டு என்பது மனிதர்களுக்கும் இந்த பூமிக்கும் மிகவும் அவசியமானததாகும் எனவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Latest News
தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி : மீண்டும் உலக சந்தையில் சடுதியாக சரிந்த விலை!
Local
24 September 2026
திடீரென குறைந்த மசகு எண்ணெய் விலை : மத்திய கிழக்கு போர்ப் பதற்றத்திற்கு மத்தியிலும் திடீர் மாற்றம்!
Local
24 September 2026
கித்துல்கலவில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு : ஒருவர் மாயம்!
Local
24 September 2026
சாரதி அனுமதிப்பத்திர மருத்துவச் சான்றிதழுக்கான புதிய டிஜிட்டல் முறை இன்று முதல் ஆரம்பம்!
Local
24 September 2026
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம் : இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!
Local
24 September 2026
கிங் கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!
Local
24 September 2026
கில்லுக்கு ரோகித் - கோலியின் வழிகாட்டுதல் பெரும் பாக்கியம்: கவுதம் கம்பீர் பாராட்டு!
Local
24 September 2026
மாற்றுத்திறனாளிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர நடைமுறைகளில் சீர்திருத்தம்: நாடாளுமன்ற விசேட குழு பரிந்துரை!
Local
24 September 2026
ஒக்டோபர் 1 முதல் தாளில்லா சுங்கப் பிரகடன முறைமை அறிமுகம்: இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாற்று நடவடிக்கை!
Local
24 September 2026
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகுகிறார் வனிந்து ஹசரங்க: இலங்கைத் அணிக்கு பின்ன
Local
24 September 2026