லெபனானின் பெய்ரூட் நகரில் ஹிஸ்புல்லா அமைப்புடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு, இஸ்ரேல் நேற்று (6) முதல் முறையாக வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.
பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஹிஸ்புல்லாவின் உயரடுக்கு ரத்வான் படையின் தளபதி இலக்கு வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் அந்தத் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், இஸ்ரேலிய இராணுவமோ அல்லது ஹிஸ்புல்லாவோ அதனை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
இந்தத் தாக்குதல் அமெரிக்கா - ஈரான் சமரசத்தின் ஒரு பகுதியான போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானின் தென்பகுதியில் தாக்குதல்கள் தொடர்வதால், ஹிஸ்புல்லாவும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்தநிலயைில், ஜெலயா நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, லெபனான் பிரதமர் நவாப் சலாம் மற்றும் ஜனாதிபதி ஜோசப் அவுன் ஆகியோர், இஸ்ரேலுடன் உயர்மட்ட சந்திப்பு நடத்துவதற்கு இது சரியான தருணம் அல்ல எனக் கூறியுள்ளனர்.
மேலும், இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறுவதற்கான கால அட்டவணையே தற்போதைய தேவை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 2ஆம் திகதி தொடங்கிய இந்த மோதலில் லெபனானில் 2,700-க்கும் மேற்பட்டோரும், இஸ்ரேல் தரப்பில் 17 வீரர்களும் உயிரிழந்துள்ளனர்.

Latest News
மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்த அமெரிக்க தூதரகங்கள்!
Local
20 September 2026
நுவரெலியாவுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை : 6 மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்!
Local
20 September 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை!
Local
20 September 2026
தாய்லாந்திலிருந்து இலங்கை வந்த 3 பெண்கள் கைது : பல கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
Local
20 September 2026
ஐரோப்பாவிலிருந்து படைகளைத் திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்: நேட்டோ நாடுகளுக்கு பேரதிர்ச்சி!
Local
20 September 2026
அச்சமடைய மாட்டோம்" - தென்சீனக் கடலில் சீனாவுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் கொந்தளிப்பு!
Local
20 September 2026
ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் அதிரடி முடிவு: தரவு கேபிள்கள் அமைக்க இனி தெஹ்ரானின் அனுமதி கட்டாயம்!
Local
20 September 2026
முறைகேடுகள் மற்றும் தாமதங்களுக்கு முற்றுப்புள்ளி: புதிய வாட்ஸ்அப் சேவையைத் தொடங்கியது மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!
Local
20 September 2026
"அமைதியான காசாவாக" மாறும் கியூபா: அமெரிக்காவின் தடைகளால் உருக்குலைந்த மக்களின் இயல்பு வாழ்க்கை!
Local
20 September 2026
இளையராஜாவின் இசையில் உருவான இலங்கைத் திரைப்படம்: ஆஸ்கார் விருதுக்குத் தேர்வாகி மாஸ் சாதனை!
Local
20 September 2026