General07 May 2026

தவெக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு: பனையூர் அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்வு தற்காலிகமாகத் தாமதமடைந்துள்ள நிலையில், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் உடனடியாகத் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு கட்சித் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று தமிழக ஆளுநரைச் சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். எனினும், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான போதிய ஆதரவு கடிதங்கள் சமர்ப்பிக்கப்படாததால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இழுபறி நிலை நீடிக்கிறது.

இதனால் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அவசர ஆலோசனைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஆட்சி அமைக்கத் தேவையான மேலதிக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் திரட்டுவது தொடர்பான வியூகங்கள்.

ஆளுநரின் கோரிக்கைக்கு இணங்க மேலதிக ஆவணங்களைச் சமர்ப்பித்தல் மற்றும் சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெறுதல்.

தற்போதைய அரசியல் சூழலில் கட்சியின் ஒற்றுமையைப் பேணுதல் மற்றும் அடுத்தகட்டத் திட்டங்கள் குறித்து உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்துதல்.

விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைவதில் ஏற்பட்டுள்ள இந்தத் தாமதம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்றைய கூட்டத்தின் முடிவுகள் மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக அமைந்துள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes