General07 May 2026

களு கங்கை பாலத்தில் சிற்றூர்தி விபத்து : 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!

கட்டுநாயக்காவில் இருந்து கஹவத்தை நோக்கி பயணித்த சிற்றூர்தி ஒன்று இன்று அதிகாலை இரத்தினபுரி பகுதியில் அமைந்துள்ள களு கங்கை பாலத்தில் விபத்துக்குள்ளானது.

பாலத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் மோதியதில் அதில் பயணித்த 9 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

விபத்து நேரத்தில் வாகனம் களு கங்கையில் விழுந்திருக்குமானால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் நிலை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், இது தொடர்பாக இரத்தினபுரி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes