ஐபோன்களின் புதிய செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் குறித்து தவறான வாக்குறுதிகளை வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கைத் தீர்க்க, அப்பிள் நிறுவனம் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 184 மில்லியன் பவுண்டுகள்) இழப்பீடாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு அப்பிள் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கை வழக்கில், நிறுவனம் தனது 'Apple Intelligence' மற்றும் மேம்படுத்தப்பட்ட 'Siri' குரல் உதவியாளர் குறித்து பொய்யான விளம்பரங்களை மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அப்பிள் நிறுவனம் விளம்பரப்படுத்திய பல ஏஐ அம்சங்கள் ஐபோன் விற்பனைக்கு வந்தபோது அதில் இருக்கவில்லை என்றும், சில அம்சங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு வராது என்றும் சட்டத்தரணிகள் வாதிட்டனர்.
'Siri' ஒரு முழுமையான தனிப்பட்ட ஏஐ உதவியாளராக மாறும் என விளம்பரப்படுத்தப்பட்ட போதிலும், ஐபோன் 16 பயனாளர்களுக்கு அத்தகைய அனுபவம் கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் படி, அப்பிள் நிறுவனம் ஜூன் 2024 முதல் மார்ச் 2025 வரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் iPhone 15 மற்றும் iPhone 16 கொள்வனவு செய்த ஒவ்வொரு பயனாளருக்கும் தலா 25 டொலர் முதல் 95 டொலர் வரை இழப்பீடு வழங்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தான் எந்தத் தவறும் செய்ததாக அப்பிள் நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும், நீண்ட கால சட்டப் போராட்டத்தைத் தவிர்த்து, புதுமையான தயாரிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதற்காக இந்தத் தீர்வுக்கு உடன்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
"தற்போது இல்லாத மற்றும் இனி வரப்போகாத தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்தி, ழுpநnயுஐ மற்றும் யுவொசழிiஉ போன்ற நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்க அப்பிள் முயன்றது" என மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
Latest News
தோனிக்கு பிரியாவிடைப் போட்டி கிடைக்குமா? – நிபந்தனையுடன் எதிர்வுகூறும் ஆர். அஸ்வின்
Local
07 May 2026
விஜய்யின் 'ஜனநாயகன்' விரைவில்? : ரசிகர்கள் உற்சாகம்!
Local
07 May 2026
மெட்ரோ பேருந்து திட்டம் ஒரு 'தேசியக் குற்றம்': அரசாங்கத்தின் மீது கெமுனு விஜேரத்ன கடும் விமர்சனம்
Local
07 May 2026
தீவிரமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்- நான்கு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
Local
07 May 2026
இலங்கையில் மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை!
Local
07 May 2026
ஐபோன் பயனாளர்களுக்கு 250 மில்லியன் டொலர் இழப்பீடு: அப்பிள் நிறுவனத்தின் அதிரடி முடிவு
Local
07 May 2026
கபில சந்திரசேனவை உடனடியாகக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
Local
07 May 2026
இரண்டு ஆண்டுகளின் பின் டொலரின் பெறுமதி 324 ரூபாயைக் கடந்தது: இலங்கையின் வெளிநாட்டு இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல்
Local
07 May 2026
தவெகவை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்: ஆளுநருக்கு தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை!
Local
07 May 2026
கல்முனை - சாய்ந்தமருது விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு: ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்
Local
07 May 2026