General07 May 2026

இலங்கையில் மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (07) அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (06) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 395,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று அது 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,788 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை மற்றும் உள்நாட்டு வர்த்தக நிலவரத்திற்கு ஏற்ப தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes