International07 May 2026

விஜய்க்கு முதலமைச்சருக்கான பாதுகாப்பு வழங்கியது யார்? – அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய்க்கு முதலமைச்சர் அந்தஸ்திலான பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது குறித்து ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேள்வி எழுப்பியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தமிழ்நாடு அரசு அதிகாரிகளிடமும், டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோரிடமும் இதுதொடர்பாக ஆளுநர் விளக்கம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நேரு விளையாட்டரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு யார் அறிவுறுத்தினார்கள் என்றும் அவர் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநரின் கேள்வி ஒருபுறமிருக்க, “ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு, முறைப்படி பதவியேற்ற பின்னரே அரசு மரபுப்படியான பாதுகாப்பை ஏற்றுக்கொள்வேன்” என்று கூறி அந்த வாகனங்களை விஜய் தாமாகவே முன்வந்து திருப்பி அனுப்பியதாகத் தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் 113 இடங்களைப் பெற்றுள்ள தவெக (காங்கிரஸ் ஆதரவுடன்), ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையை ஆளுநரிடம் நிரூபிக்க வேண்டிய சூழலில் இந்த சர்ச்சை எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes