General07 May 2026

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் மீட்பு

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் இன்று சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்றைய தினம் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.

இன்றுடன் 259 மனித என்புத் தொகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 254 எலும்பு எச்சங்கள் துப்புரவாக்கப்பட்டு அடையாளம் இடப்பட்டு அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

14 பிற பொருட்களும் கூட இன்றையதினம் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அகழ்வின்போது தொல்லியல் பேராசிரியர் ராஜ்சோமதேவா தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், சட்டத்தரணிகள், துறை சார் நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes