ஒன்றிய அரசால் வழங்கப்படும் உயரிய பாதுகாப்பான இசட் பிளஸ் பாதுகாப்பு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர்கள் கலைஞர் மற்றும் ஜெயலலிதாவை தொடர்ந்து முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதலமைச்சராக நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
வழக்கமாக ஜோசப் விஜய் பிரபல நடிகர் என்பதால், அவரை பார்க்க அதிகளவில் ரசிகர்கள் கூட்டம் வருகிறார்கள்.
அதேநேரம் ஆபத்தை உணராமல் அவரது வாகனம் முன்பும் பின்பும் ரசிகர்கள் மற்றும் தவெகவினர்கள் பலர் உந்துருளி மற்றும் சிற்றூர்ந்துகளில் தொடரும் நிகழ்வுகள் நடந்து வருகிறது.
பல நேரங்களில் பின் தொடரும் நபர்கள் விபத்துக்குள்ளாகும் நிலையும் காணப்படுகிறது.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு ஜோசப் விஜய்க்கு தமிழக காவல்துறையின் உயரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இருந்தாலும் இந்த பாதுகாப்பை மீறி நேற்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் வாகனத்தை பொதுமக்கள் பலர் மீறி உள்ளே வந்தனர்.
இதை முற்றிலும் தடுக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு அவருக்கு நாட்டின் உயரிய பாதுகாப்புகளில் ஒன்றான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதை முற்றிலும் தடுக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சகம் முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு அவருக்கு நாட்டின் உயரிய பாதுகாப்புகளில் ஒன்றான ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக இசட் பிளஸ் பாதுகாப்பு இந்தியாவில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மிக முக்கிய நபர்களுக்கு தான் ஒன்றிய அரசு வழங்கப்படும் பாதுகாப்பாகும்.
இந்த இசட் பிளஸ் பாதுகாப்பில் அதி நவீன ஆயுதங்கள் மற்றும் பயிற்சி பெற்ற 55 பாதுகாப்பு பணியாளர்கள் இதில் உள்ளனர்.
இவர்கள் 10க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவார்கள்.
இந்த பாதுகாப்பில் கமாண்டோக்கள் உயரிய ரகமான எம்பி 5 வகை நவீன துப்பாக்கிகள், குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் முன்பும் பின்பும், பைலட் வாகனங்களுடன் பாதுகாப்பு வழங்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Latest News
226 பில்லியன் ரூபாய் போதைப்பொருள் மீட்பு; நீதிமன்றத்திற்குள் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தினார் அமைச்சர் ஆனந்த விஜயபால!
Local
24 June 2026
மெட்டாவின் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா?
Local
24 June 2026
காணாமல் போன 19 வயது யுவதியை தேடுவதற்கு பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
Local
24 June 2026
சொத்து மற்றும் வாகன விற்பனை: புதிய வரிச் சலுகை குறித்த முக்கிய அறிவிப்பு!
Local
24 June 2026
கனிம அகழ்வுக்கு அள்ளி வழங்கப்படும் ஆராய்ச்சி உரிமங்கள்
Local
24 June 2026
அமெரிக்க செனட் சபையின் வாக்கெடுப்பு அர்த்தமற்றது : ட்ரம்ப் குற்றச்சாட்டு!
Local
24 June 2026
பொசன் தானசாலைகளுக்கு காவல்துறை அனுமதி கட்டாயம்! வீதி விபத்துகளை மறைத்தால் சாரதிகளுக்கு சிறை!
Local
24 June 2026
அரச வாகன முறைகேடு: விமல் வீரவன்சவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் விளக்கமறியலில்
Local
24 June 2026
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை? நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலம்!
Local
24 June 2026
தெல்தெனிய பெண் மரணம் - காதலனுக்கு உதவிய மற்றுமொரு நபர் கைது
Local
24 June 2026