General03 June 2026

குவைட்டில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இலங்கையர்கள் உட்பட 63 பேர் காயம்

குவைட் சர்வதேச வானூர்தி நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் காயமடைந்த 63 பேரில் மூன்று இலங்கை நாட்டவர்களும் உள்ளடங்குவதாக குவைட்டுக்கான இலங்கைத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானினால் ஏவப்பட்ட அதிநவீன ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைகள் குவைட் சர்வதேச வானூர்தி நிலையத்தின் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்கியதில், வானூர்தி நிலையத்தின் உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்ததுடன், அங்கு தங்கியிருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என பலரும் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவித்த வேளையில் வானூர்தி நிலைய வளாகத்தில் தங்கியிருந்த போதே மூன்று இலங்கையர்கள் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு குவைட்டில் உள்ள உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes