யாழ்ப்பாணம், உரும்பிராயில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொன் சிவகுமாரனின் 52ஆவது நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்த பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை எடுத்த தீர்மானத்துக்கு அமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு உரும்பிராயில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முன்பாக உத்தியோகபூர்வமாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதேச சபைக்குச் சொந்தமான சந்தை வளாகத்தில் சபை உறுப்பினர்கள், உரும்பிராய் பகுதி இளைஞர்கள் மற்றும் உணர்வாளர்கள் ஒன்றிணைந்து இந்த நினைவேந்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த புலனாய்வாளர்கள், படம் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்து வந்ததைத் தொடர்ந்து, கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் தவிசாளர் தியாகராஜா நிரோஷை கோப்பாய் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள தவிசாளர் தியாகராஜா நிரோஷ், நினைவேந்தல்களுக்குத் தடையில்லை என அரசாங்கம் வாய்வார்த்தையாகக் கூறினாலும், நடைமுறையில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகளைக்கூட அங்கீகரிக்க மறுக்கும் போக்கே நீடிப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Latest News
விசேட கணக்கில் முடங்கிக் கிடக்கும் Rebuilding Sri Lanka திட்டத்தின் நிதி!
Local
04 June 2026
மனைவியை கொலை செய்து காணாமல்போனதாக நாடகமாடிய கணவர் கைது
Local
04 June 2026
பொன் சிவகுமாரன் நினைவேந்தல் ஏற்பாடு: பிரதேச சபை தவிசாளரிடம் காவல்துறை விசாரணை
Local
04 June 2026
ஈரானின் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்தது அமெரிக்கா!
Local
04 June 2026
ரங்க நிஷாந்தவின் மரணத்துக்கு இதுவே காரணம்: நால்வர் அடங்கிய நிபுணர் குழு நீதிமன்றில் அறிக்கை
Local
04 June 2026
வவுனியாவில் தாக்குதல்: 7 மாணவர்கள் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு!
Local
04 June 2026
மேற்கிந்திய தீவுகளுக்கு 304 ஓட்டங்கள் வெற்றி இலக்கு: பெதும், குசல் அபார அரைச்சதம்!
Local
04 June 2026
ஜூலைக்குள் இலங்கையின் இறக்குமதி செலவு கணிசமாகக் குறையும் என எதிர்பார்ப்பு
Local
04 June 2026
குவைட்டில் ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இலங்கையர்கள் உட்பட 63 பேர் காயம்
Local
03 June 2026
நெருக்கடியில் முச்சக்கரவண்டித் துறை - அரசாங்கத்தின் அணுகுமுறையை விமர்சிக்கும் தொழிற்சங்கத் தலைவர்!
Local
03 June 2026