அரசாங்கத்தினால் பயங்கரவாதத் தடைச்சட்டம் பாரபட்சமான முறையில், அரசியல் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்போதைய ஆட்சியின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் கலைஞர் ஒருவர், தனது 'ராப்' பாடல் ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய உள்ளடக்கங்களைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
இசை மற்றும் கலைசார் வெளிப்பாடுகள் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்களாகக் கருதப்படுமாயின், அண்மையில் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தியின் அரசியல்வாதிகள் புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்திய போது இதே சட்டங்கள் ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான பாடல்களைச் சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்திருந்தார். அப்படியாயின், அப்போது காவல்துறை எங்கே இருந்தது? பயங்கரவாதத் தடைச்சட்டம் எங்கே போனது? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
சட்டத்தின்படி விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கமாகும். அந்த அமைப்பின் கொள்கைகளை எவரும் பரப்புவதையோ அல்லது மகிமைப்படுத்துவதையோ நாம் ஆதரிக்கவில்லை என்பதில் எமது நிலைப்பாடு தெளிவானது.
எனினும், ஒரு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினரும், ஒரு சாதாரண இளம் கலைஞரும் ஒரே மாதிரியான செயலைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்படும் போது, ஒருவருக்கு அரசியல் பாதுகாப்பும், மற்றவருக்குப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதும் வழங்கப்படுவது முற்றிலும் தவறானதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டமானது அரசியல் வசதிகளுக்கு ஏற்ப வளைக்கப்படக் கூடாது. அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியும், சாதாரண இளைஞர்களுக்கு வேறொரு நீதியும் வழங்குவதை ஒரு ஜனநாயக சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறான செயல்கள் சட்டவிரோதமானவை என அரசாங்கம் கருதினால், அரசியல் பின்னணிகளைப் பாராது பொறுப்புக்கூறல் என்பது சட்டத்தின் முன்னால் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், இந்தக் கைது நடவடிக்கையானது அதிகாரத்தைத் திட்டமிட்டுத் தவறாகப் பயன்படுத்திய ஒரு செயலாகவே பார்க்கப்படும் என நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
Latest News
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: இல்லத்தின் பணிப்பாளர் கைது!
ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை
பிட்கொயினின் விலை 4% வீழ்ச்சி: 3 மாதங்களில் இல்லாத குறைந்த மட்டம்!
உள்நாட்டு வருமானவரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றொப்பம்
நீதிமன்றத்தில் சான்றுகளுடன் அம்பலமான உண்மை : விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
சதொச ஊடாக 25 அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய அமைச்சு தீர்மானம்