யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஷ்ட சித்த மருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில், அவர் தனது வீட்டிலேயே வைத்து கையினால் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை நீதிமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிவான் எஸ். லெனின்குமார் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகள் மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்கு எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகள் ஆகியோரின் விளக்கமறியல் காலத்தையும் ஜூன் 16 ஆம் திகதி வரை நீடிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணைகளின் போது, பாதிக்கப்பட்ட தரப்புக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் வழிகாட்டலில் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் முன்னிலையாகினார்.
முதலாம் சந்தேகநபரான விரிவுரையாளரின் மருமகன் சார்பில் சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் முன்னிலையாகியிருந்தார்.
அதேவேளை, இரண்டாம் சந்தேகநபரான விரிவுரையாளரின் மகள் சார்பில் சட்டத்தரணி சமந்த அத்துக்கோரளவின் வழிகாட்டலில் மற்றொரு சட்டத்தரணி முன்னிலையாகியிருந்தார்.
இந்த வழக்கின் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளன.
Latest News
நீண்ட இடைவெளியின் பின் பாடசாலை திரும்பும் வட நைஜீரியப் பெண்கள்: சவால்களுக்கு மத்தியில் புதியதொரு கல்விப் புரட்சி!
Local
04 June 2026
ஐபோன் பயனர்களுக்கு அதிர்ச்சித் தகவல் : இந்த மொடல்களுக்கு இனி iOS 27 அப்டேட் கிடைக்காது!
Local
04 June 2026
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: இல்லத்தின் பணிப்பாளர் கைது!
Local
04 June 2026
ஜனநாயகன் திரைப்படக் கசிவு விவகாரம்: கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
Local
04 June 2026
போர் நிறுத்த அறிவிப்புக்கு பின்னரும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு!
Local
04 June 2026
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை
Local
04 June 2026
பிட்கொயினின் விலை 4% வீழ்ச்சி: 3 மாதங்களில் இல்லாத குறைந்த மட்டம்!
Local
04 June 2026
உள்நாட்டு வருமானவரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் சான்றொப்பம்
Local
04 June 2026
நீதிமன்றத்தில் சான்றுகளுடன் அம்பலமான உண்மை : விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!
Local
04 June 2026
ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்து: மீட்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
Local
04 June 2026