உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் ஈரான் கால்பந்து அணியினர், போட்டி நடைபெறும் அதே நாளில் அமெரிக்க மண்ணுக்குள் நுழைந்து, போட்டி முடிந்த சில மணித்தியாலங்களிலேயே அங்கிருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா கடுமையான விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நடவடிக்கை காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.
இதன் காரணமாக, ஈரான் கால்பந்து அணி தனது உலகக் கிண்ணப் பயிற்சிகளுக்காக முதலில் அமெரிக்காவின் அரினோசா (Arizona) மாகாணத்தில் உள்ள டக்சன் (Tucson) நகரைத் தேர்வு செய்திருந்தது.
எனினும், தற்போதைய போர்ச் சூழலால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டு, ஈரான் அணி தற்போது மெக்சிகோவில் முகாமிட்டுள்ளது.
இந்த விசா கட்டுப்பாடுகள் குறித்து மெக்சிகோவிற்கான ஈரானிய தூதுவர் அபுல்பஸ்ல் பசந்திதே (Abolfazl Pasandideh) செய்தியாளர்களிடம் விபரிக்கையில், "அமெரிக்காவின் விசா கட்டுப்பாடுகளின்படி, ஈரான் அணியினர் போட்டி நடைபெறும் நாள் அன்று காலையில்தான் அமெரிக்காவிற்குள் நுழைய முடியும். அதேபோல் போட்டி முடிந்த அன்றைய தினமே அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்." என்று அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் கால்பந்து அணி, உலகக் கிண்ணத் தொடரின் குழு நிலைப் போட்டிகளில் (Group Stage Matches) மூன்று போட்டிகளை அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சியாட்டல் ஆகிய நகரங்களில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மூன்று போட்டிகளின் போதும் ஈரான் அணியினர் இதே கடுமையான விசா விதிமுறைகளையே பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
Latest News
மத்திய கிழக்கு பதற்றம் நீடித்தாலும் எண்ணெய், எரிவாயு விலையில் வீழ்ச்சி!
Local
07 June 2026
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி!
Local
07 June 2026
காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பலத்த காற்று : கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை
Local
07 June 2026
ஈரான் உலகக் கிண்ண அணிக்கு கடுமையான விசா கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா
Local
07 June 2026
பிரபல நடிகர் சலீம் குமார் காலமானார்!
Local
07 June 2026
CBL குழுமத்தின் தலைவர் ரம்ய விக்கிரமசிங்க காலமானார்
Local
07 June 2026
ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்!
Local
07 June 2026
மழையால் கைவிடப்பட்ட 2ஆவது ஒருநாள் போட்டி!
Local
07 June 2026
ஈரான் ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் - ஈரான் பதிலடி
Local
07 June 2026
பரீட்சை முறைகேடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய Gen Z தலைமுறை
Local
07 June 2026