2026 உலகக் கிண்ண கால்பந்து தொடருக்காக, நியூசிலாந்து அணிக்கு எதிரான தனது முதல் போட்டிக்கு ஒரு நாள் முன்பாக ஈரான் தேசிய கால்பந்து அணி அமெரிக்காவுக்குப் புறப்படவுள்ளது.
ஜூன் 16-ஆம் திகதி நடைபெறவுள்ள இந்த போட்டிக்காக, ஈரான் கால்பந்து அணியின் வீரர்கள் அமெரிக்கா செல்வதற்கான விசாக்களைப் பெற்றுள்ளனர்.
இருப்பினும், அந்த பிரதிநிதிகள் குழுவை சேர்ந்த நிர்வாக மற்றும் மேலாண்மைப் பிரிவினர் 12-க்கும் மேற்பட்டோருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் அமீர் மெஹ்தி அலவி வெளியிட்ட அறிக்கையில், "FIFA அமைப்பின் திட்டத்தின்படி, ஈரான் அணி சிறப்பு வானூர்தி (Charter flight) மூலம் அமெரிக்காவுக்குப் பயணம் செய்யும். நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு ஒரு நாள் முன்பாக அணி போட்டி நடைபெறும் நகரத்தை சென்றடையும். அதனைத் தொடர்ந்து அடுத்த இரண்டு போட்டிகளுக்கு, போட்டி நடக்கும் இடத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே நாங்கள் சென்றடைவோம்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடன் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ஈரான் அணி தனது உலகக் கிண்ணத்திற்கான பயிற்சி முகாமை திட்டமிட்டபடி அரிசோனாவில் உள்ள டக்சன் (Tucson) நகருக்குப் பதிலாக, மெக்சிகோவின் எல்லை நகரான டிஜுவானாவுக்கு (Tijuana) மாற்றியமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஈரான் மீது அதிரடித் தாக்குதலைத் தொடங்கியது அமெரிக்கா!
Local
10 June 2026
கோட்டாபய உள்ளிட்டோருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னரே இரைச்சல் அதிகரித்துள்ளது - நளிந்த ஜயதிஸ்ஸ
Local
10 June 2026
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறத் திட்டமிடுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?
Local
10 June 2026
அமெரிக்காவின் வாதத்தை அதிரடியாக நிராகரித்த ஈரான்!
Local
10 June 2026
அதிபர் சேவை அதிகாரிகளின் வேதனம் குறித்து வெளியான அறிவிப்பு
Local
10 June 2026
உலகில் பிறப்பு விகிதம் குறைவதற்கு ஐபோன் மற்றும் நவீன தொலைப்பேசிகளே காரணம்: ஆய்வுகளில் அதிர்ச்சித் தகவல்!
Local
10 June 2026
முறையான அனுமதிப் பத்திரமின்றி நூற்றுக்கணக்கான வானூர்திகளை இயக்கிய கனேடிய விமானி: காவல்துறை அதிரடி விசாரணை!
Local
10 June 2026
தமிழக முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா: இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சிப் பதிவு!
Local
10 June 2026
ஆடி அமாவாசை தினத்தைப் பொது விடுமுறையாகப் பிரகடனப்படுத்துமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை: பரிசீலித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்கிறார் அமைச்சர்!
Local
10 June 2026
அமெரிக்காவுக்கு புறப்படும் ஈரான் கால்பந்து அணி: உலகக் கிண்ணத்துக்கு ஒரு நாள் முன்பாக பயணம்!
Local
10 June 2026