General10 June 2026

தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தால் திட்டமிடப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு ஒத்திவைப்பு

தொடருந்து பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தால் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் போக்குவரத்து பிரதி அமைச்சரின் தனிச் செயலாளருக்கும் இடையே நடந்த கலந்துரையாடலின் போது, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன்படி, பயணிகள் தொடருந்து சேவைகள் இன்று வழக்கம் போல இயங்கும் என்றும், பயணிகள் எவ்வித இடையூறும் இன்றி பயணிக்கலாம் என்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் சரக்கு தொடருந்து சேவைகளிலிருந்து மட்டும் விலகிக்கொள்ள அந்த சங்கம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடருந்து கிரேன் இயந்திரங்கள், சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி நேற்று நள்ளிரவு முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes