General10 June 2026

சுரேஷ் சலே விவகாரம்: மருத்துவ அறிக்கையை கோரும் உத்தரவு இன்று

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலேவை, விசேட மருத்துவ நிபுணர் குழுவின் முன்பாக முன்னிலைப்படுத்தி அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடுமாறு சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கை மீதான கட்டளை இன்று வழங்கப்படவுள்ளது.

முன்னதாக, சுரேஷ் சலே சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவொன்று கடந்த ஜூன் மாதம் 04ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இந்த விடயத்தை ஆராய்ந்தது.

அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் நீதிமன்றம், இது தொடர்பான கட்டளையை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்திருந்தது.
Related recommendation
Hiru TV News | Programmes