General10 June 2026

'டிட்வா' சூறாவளிப் பேரழிவு: தொடரும் அவலம் – தற்காலிக முகாம்களில் முடங்கியுள்ள 4 மாவட்ட மக்கள்!

'டிட்வா' சூறாவளி தாக்கம் இடம்பெற்று ஐந்து மாதங்களுக்கும் மேல் கடந்துள்ள நிலையிலும், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தங்களின் இருப்பிடங்களை இழந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள், இன்றும் தற்காலிக நிவாரண முகாம்களிலேயே தஞ்சம் புகுந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள தற்காலிக முகாம்களில் தற்போதும் தங்கியுள்ள மக்களின் முழுமையான விபரங்களை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.

கேகாலை, நுவரெலியா மற்றும் கொழும்பு ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 465 குடும்பங்களைச் சேர்ந்த 1,337 பேர் இன்னமும் பாதுகாப்பான மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கேகாலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 02 மத்திய நிலையங்களில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 133 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 01 மத்திய நிலையத்தில் 35 குடும்பங்களைச் சேர்ந்த 140 பேர் தற்போதும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தலைநகர் கொழும்பில் 02 மத்திய நிலையங்களில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் இன்னமும் தற்காலிகமாக வாழ்ந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தினால் பதுளை மாவட்டமே மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. அங்குள்ள 13 மத்திய நிலையங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் (1003 பேர்) தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes