கால்பந்து உலகின் இரு பெரும் ஆளுமைகளான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் நேருக்கு நேர் மோதி சுமார் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
செம்பியன்ஸ் லீக் குழு சுற்றில் பார்சிலோனா மற்றும் யுவென்டஸ் அணிகள் மோதிய ஆட்டமே இவர்களின் கடைசி போட்டி மோதலாகும்.
அதில் ரொனால்டோ அடித்த இரண்டு கோல்களின் உதவியுடன் யுவென்டஸ் அணி 3-0 என்ற கணக்கில் பார்சிலோனாவை வீழ்த்தியது.
அதன் பிறகு இருவரின் பயணங்களும் வெவ்வேறு பாதைகளில் அமைந்ததால், அவர்கள் மைதானத்தில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை.
இருப்பினும், இந்த நிலைமை 2026 FIFA உலகக் கிண்ணத்தில் மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அர்ஜென்டினா மற்றும் போர்த்துகல் அணிகள் கால் இறுதிப் போட்டியிலேயே மோதிக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இதில் உள்ளன.
இந்த உலகக் கிண்ணத்தில் அர்ஜென்டினா அணி J பிரிவிலும், போர்த்துகல் அணி K பிரிவிலும் இடம் பெற்றுள்ளன.
அர்ஜென்டினா அணி அல்ஜீரியா, ஒஸ்திரியா மற்றும் ஜோர்டான் ஆகிய அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
போர்த்துகல் அணி டிஆர் காங்கோ, உஸ்பெகிஸ்தான் மற்றும் கொலம்பியா.
மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ உலகக் கிண்ணத்தியில் நேருக்கு நேர் சந்திக்க மூன்று வழிகள் உள்ளன:
சூழ்நிலை 1 (Scenario 1): அர்ஜென்டினா மற்றும் போர்த்துகல் ஆகிய இரு அணிகளும் தங்கள் பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்தால், அவை தொடரின் ஒரே பிரிவின் கீழ் வரும். அதன் பிறகு, இரு அணிகளும் தங்களின் 'ரவுண்ட் ஆஃப் 32' மற்றும் 'ரவுண்ட் ஆஃப் 16' போட்டிகளில் வெற்றி பெற்றால், கால் இறுதிப் போட்டியில் (Quarter-finals) ஒன்றையொன்று எதிர்கொள்ளும்.
சூழ்நிலை 2 (Scenario 2): இரு அணிகளும் தங்களின் குழுக்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தால், அவை கால் இறுதியில் மோதுவது தவிர்க்கப்படும். மாறாக, 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றிலேயே அவை நேருக்கு நேர் மோத வேண்டி வரும். ஆனால், எதிரணிகளின் தரத்தைக் கருத்தில் கொள்ளும்போது இந்த சூழ்நிலை நடப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
சூழ்நிலை 3 (Scenario 3): ஒரு அணி முதலிடத்தையும், மற்றொரு அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தால், இறுதிப்போட்டி வரை இரு அணிகளின் பாதைகளும் வெவ்வேறாகவே இருக்கும். இந்த சூழ்நிலையில், மெஸ்ஸியும் ரொனால்டோவும் நியூ ஜெர்சியில் நடைபெறும் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் (Final) மட்டுமே சந்திக்க முடியும்.
Latest News
மஹர மற்றும் கம்பஹா பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு
Local
10 June 2026
மெஸ்ஸி - ரொனால்டோ உலகக் கிண்ண மோதல் : சாத்தியக்கூறுகள் என்ன?
Local
10 June 2026
சங்கீத்ஷன் விடுதலை விவகாரம்: ஜனாதிபதி அநுர குமார - சிறீதரன் எம்.பி இடையே முக்கிய தொலைபேசி உரையாடல்!
Local
10 June 2026
மக்களுக்கு வரிச்சுமை,புகையிலை நிறுவனங்களுக்கு வரிச்சலுகை - அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு
Local
10 June 2026
உலக அமைதிச் சுட்டெண் 2026: தெற்காசியாவில் இலங்கை மிகப்பெரிய முன்னேற்றம்
Local
10 June 2026
தென்னாபிரிக்காவில் கொடூர துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு, 9 பேர் காயம்
Local
10 June 2026
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் மகளிர் அணி
Local
10 June 2026
தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு விளக்கமறியல்
Local
10 June 2026
இந்த ஆண்டு இறுதிக்குள் 31,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை
Local
10 June 2026
சுரேஷ் சலேவுக்கு ஆதரவான சத்தியாக்கிரகப் போராட்டம் கைவிடப்பட்டது
Local
10 June 2026