General10 June 2026

அரசாங்கத்தின் கீழ் உள்ள தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் வெளியீடு

இலங்கையிலுள்ள பெருந்தோட்டங்களின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் அங்கு பணிபுரியும் நிரந்தர, தற்காலிகத் தொழிலாளர்களின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை விபரங்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, நாட்டில் உள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் மொத்தம் 398 தோட்டங்கள் காணப்படுவதுடன், அவற்றில் சுமார் 95,000 இற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனங்களின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களின் விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இந்த விபரங்களை வெளியிட்டார்.

தனியார்மயமாக்கப்பட்ட பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் 398 தோட்டங்கள் உள்ளன. இதில் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை குத்தகைக்கு கொடுத்துள்ள 204 தோட்டங்களும், அரசுப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் குத்தகைக்கு கொடுத்துள்ள 194 தோட்டங்களும் அடங்கும்.

சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம், எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனம் ஆகிய 3 அரசுக்கு சொந்தமான பெருந்தோட்ட நிறுவனங்கள் மொத்தம் 32 தோட்டங்களை நிர்வகிக்கின்றன.

அரசுப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் நேரடியாக 16 தோட்டங்களையும், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை நேரடியாக 17 தோட்டங்களையும் தங்கள் நிர்வாகத்தின் கீழ் வைத்துள்ளன.

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களில் 76,044 நிரந்தரத் தொழிலாளர்களும், 18,955 தற்காலிகத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை 2,738 நிரந்தரத் தொழிலாளர்களைக் கொண்டுள்ளது.

அரசுப் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம்; 1,524 நிரந்தரத் தொழிலாளர்களையும், 573 தற்காலிகத் தொழிலாளர்களையும் பணியில் அமர்த்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes