General10 June 2026

பதுளை கிலென்பீல்ட் தோட்டத்தில் தீப்பரவல் - இரு வீடுகள் முழுமையாகச் சேதம்

பதுளை, கிலென்பீல்ட் தோட்டத்தில் இன்று (10) காலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக இரண்டு வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

இன்று காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாகவே இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்கள் எமது செய்திசேவைக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த தீப்பரவல் காரணமாக குறித்த வீடுகளிலிருந்த உடமைகள் சேதமடைந்துள்ளன.

உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படாத நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தற்காலிகமாக உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes