ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஹஸன் யூசுப் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரது மகனை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
71 வயதான யூசுப், கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் எவ்வித விசாரணைகளுமின்றி இஸ்ரேலால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
1980களில் ஷேக் அஹ்மத் யாசின் மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த பிற பாலஸ்தீனிய உறுப்பினர்களுடன் இணைந்து ஹமாஸ் அமைப்பை நிறுவிய அவர், மேற்குக்கரையின் மூத்த ஹமாஸ் தலைவர்களில் ஒருவராவார்.
கடந்த பல வருடங்களாக இஸ்ரேலிய காவல்துறையினரால் பலமுறை கைது செய்யப்பட்டுள்ள ஹஸன் யூசுப், இறுதியாக 16 மாத கால நிர்வாகத் தடுப்புக் காவலுக்குப் பின்னர் கடந்த 2020 ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest News
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Local
12 June 2026
உலகக் கிண்ணம் 2026: செக் குடியரசை வீழ்த்தி தென் கொரியா அதிரடி வெற்றி!
Local
12 June 2026
இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!
Local
12 June 2026
1.8 ட்ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச்சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்!
Local
12 June 2026
புதிய உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம் அமுல்
Local
12 June 2026
எல் நினோ தாக்கத்திலும் தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை
Local
12 June 2026
குடா ஓயாவின் நீர்மட்டம் உயர்வு - நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
12 June 2026
மின்னல் தாக்கத்திற்குள்ளான ஶ்ரீலங்கன் வானூர்தி கட்டுநாயக்கவில் அவசரமாகத் தரையிறக்கம்!
Local
12 June 2026
ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் - டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு
Local
12 June 2026
4 முக்கிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
Local
12 June 2026