2026 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தப்பட்ட) சட்டத்தின் கீழ், நாட்டின் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் வரி செலுத்துவோரின் இணக்கத்தன்மையை மேம்படுத்துவதற்குமான பல புதிய திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி,2026 ஜூன் 3 ஆம் திகதி முதல் இந்தச் சட்டம் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது.
குறிப்பிட்ட சில மோட்டார் வாகனங்களை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் இலாபம், இனிமேல் வரி விதிக்கப்படக்கூடிய வருமானமாகக் கருதப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்கள் மற்றும் கூட்டுப்பங்கான்மைகளுக்கான மூலதன இலாப வரி 15 சதவீதமாகவும்; அறக்கட்டளைகள், பரஸ்பர நிதியங்கள் (Mutual funds) மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதமாகவும் திருத்தப்பட்டுள்ளது.
மாதத்திற்கு 100,000 ரூபாவிற்கு மேற்பட்ட சேவைக் கொடுப்பனவுகளுக்கான 5 சதவீதம் தடுத்து வைக்கப்படும் வரியின் வரம்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், சமூக ஊடக நிபுணர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், ஒளிப்பதிவாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோரும் இனி இந்த வரி வரம்பிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
வரி செலுத்துவோர் இனி மதிப்பீட்டு வரி அறிக்கைகளை (SET) சமர்ப்பிக்க வேண்டிய தேவை இல்லை. அவற்றுக்குப் பதிலாக, காலாண்டு வரி தவணைக்கட்டணங்கள் அதற்கு முந்தைய ஆண்டின் வரிப் பொறுப்பின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஆயுள் காப்புறுதி முதிர்வு, கொள்கை ஒப்படைப்பு (Surrender) அல்லது காப்புறுதிதாரரின் மரணத்தின் போது பெறப்படும் தொகைகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 2024/25 வரி ஆண்டு வரையிலான தாமதக் கொடுப்பனவுகள் மற்றும் குறைவான வரிச் செலுத்தல்களுக்கான வட்டித் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், நிலுவையிலுள்ள அசல் வரித்தொகை 2026 டிசம்பர் 2 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாகச் செலுத்தப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கி கணக்குகளை ஆரம்பித்தல், மோட்டார் வாகனப் பதிவு மற்றும் புதுப்பித்தல், வணிகப் பதிவு, நிறுவனப் பங்குகளைப் பரிமாற்றுதல் மற்றும் கடன் அட்டைகளைப் (Credit cards) பெற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு முக்கிய பரிவர்த்தனைகளுக்கு இனி வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Latest News
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
12 June 2026
வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய தற்போதைக்குத் தீர்மானமில்லை - நீதிமன்றில் சட்ட மா அதிபர் அறிவிப்பு!
Local
12 June 2026
தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு பிணை
Local
12 June 2026
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Local
12 June 2026
உலகக் கிண்ணம் 2026: செக் குடியரசை வீழ்த்தி தென் கொரியா அதிரடி வெற்றி!
Local
12 June 2026
இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!
Local
12 June 2026
1.8 ட்ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச்சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்!
Local
12 June 2026
புதிய உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம் அமுல்
Local
12 June 2026
எல் நினோ தாக்கத்திலும் தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை
Local
12 June 2026
குடா ஓயாவின் நீர்மட்டம் உயர்வு - நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
12 June 2026