ஃபிஃபா உலகக் கிண்ணம் 2026 தொடரின் A பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் செக் குடியரசை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா வெற்றி பெற்றுள்ளது.
மெக்சிகோவின் குவாடலஜாரா (Guadalajara) மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி, கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் செக் குடியரசு அணியின் லடிஸ்லாவ் முதல் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை தேடித்தந்தார்.
செக் குடியரசு முன்னிலை பெற்ற 8 நிமிடங்களிலேயே, தென் கொரியாவின் ஹ்வாங் இன்-பியோம் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
77ஆவது நிமிடத்தில், செக் குடியரசு அணியின் டோமஸ் சௌசெக், வலைக்குள் செலுத்தினார். ஆனால், நடுவர் அந்த கோலை நிராகரித்தார்.
இந்த நிலையில், 80ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் ஹியோன்-க்யு கோல் அடித்து கொரியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன்படி தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 2-0 என வீழ்த்திய மெக்சிகோ அணியுடன் தற்போது தென் கொரியாவும் தலா 3 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
Latest News
தங்கவிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Local
12 June 2026
வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய தற்போதைக்குத் தீர்மானமில்லை - நீதிமன்றில் சட்ட மா அதிபர் அறிவிப்பு!
Local
12 June 2026
தென் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவுக்கு பிணை
Local
12 June 2026
தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மேலும் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
Local
12 June 2026
உலகக் கிண்ணம் 2026: செக் குடியரசை வீழ்த்தி தென் கொரியா அதிரடி வெற்றி!
Local
12 June 2026
இலங்கை அணியை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி!
Local
12 June 2026
1.8 ட்ரில்லியன் டொலர் மதிப்புடன் பங்குச்சந்தைக்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ்!
Local
12 June 2026
புதிய உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டம் அமுல்
Local
12 June 2026
எல் நினோ தாக்கத்திலும் தடையில்லா மின்சாரத்தை வழங்க நடவடிக்கை
Local
12 June 2026
குடா ஓயாவின் நீர்மட்டம் உயர்வு - நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை!
Local
12 June 2026