General12 June 2026

பொசன் தினத்தில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய உந்துருளிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை

பொசன் தினத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், அதிக சத்தத்தை எழுப்பக்கூடிய உந்துருளிகளை செலுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் டபிள்யூ.ஜி.ஜே. சேனாதீர, அவ்வாறான உந்துருளிகளை உடனடியாகக் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெசாக் காலப்பகுதியிலும் இதேபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், நாடளாவிய ரீதியில் சுமார் 1,000 உந்துருளிகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes