General13 June 2026

நாட்டில் வேகமாக அதிகரிக்கும் டெங்கு: கொள்ளளவை மீறும் மருத்துவமனைகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், நாட்டிலுள்ள சில மருத்துவமனைகள் தங்களது கொள்ளளவை மீறிய அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர இதனைத் தெரிவித்துள்ளார்.

டெங்கு நோயினால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 5 பேர் பாடசாலை மாணவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் டெங்கு ஒழிப்பு வாரம் ஒன்றை நடைமுறைப்படுத்த அரச பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளும் இதில் உள்ளடக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes