General13 June 2026

ஐந்து வயது மாணவியிடம் அத்துமீறியவர் கைது

ஐந்து வயதுடைய முன்பள்ளி மாணவியிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனை மாதம்பே காவல்துறையினர், சூரியன் செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தினர்.

கைது செய்யப்பட்டவர் மாதம்பே, கருகுவட்டவ பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் குறிப்பட்டனர்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சந்தேகநபர் நடத்தி வந்த வியாபார தளத்திற்குச் சென்றுள்ளார்.

இதன்போது குறித்த சிறுமியை வியாபார தளத்திற்குள் அழைத்துச் சென்று குறித்த வர்த்தகர் அத்துமீறியதாக சிறுமியின் தாயார் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் முன்னிலையில், இன்று பிரசன்னப்படுத்தப்பட உள்ளதாக மாதம்பே காவல்துறையினர் சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes