அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கையைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்து வருகிறது.
இதன் பின்னணியில், உள்நாட்டிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், உலக சந்தையில் நிலவும் தற்போதைய நிச்சயமற்ற தன்மை காரணமாக, விலை குறைக்கப்படும் குறிப்பிட்ட காலப்பகுதியை தற்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. ஒருவித நிச்சயமற்ற நிலைமையே இன்னும் நீடிக்கிறது. இந்த மாதத்துக்காக முற்பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் கப்பல்களும் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளன. இன்னும் ஒரு மசகு எண்ணெய் கப்பல் மாத்திரமே வர வேண்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பினர் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் பணிகள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் உத்தியோகபூர்வமாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெள்ளிக்கிழமை இந்த உடன்படிக்கை கையெழுத்தான பின்னர் உலகப் பொருளாதார நிலைமை சாதகமான முறையில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சாதகமான சூழ்நிலையின் நல்ல பலன்கள் எமது நாடு போன்ற நாடுகளுக்கும் கிடைக்கும் பட்சத்தில், அதன் நன்மைகள் நிச்சயமாக மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஏப்ரல் மாதம் வரை முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட எரிபொருள் மானியப் பொதிக்காக 100 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், இந்த ஜூன் மாதத்துடன் அந்த மானியக் காலம் முடிவடைகிறது. தற்போது மாதத்தின் நடுப்பகுதி என்பதால் உலகச் சந்தை மாற்றங்களைச் சாதகமாக உற்றுநோக்க வேண்டியுள்ளதுடன், தற்போதே அவசரப்பட்டு தீர்மானங்களை எடுத்து மாத இறுதியில் என்ன நடக்கும் என்று கூறுவது நியாயமற்றது" எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், உலகச் சந்தையில் ஏற்படும் சாதகமான மாற்றங்களின் நன்மைகளை மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் எனத் தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளை எவ்வித தடையுமின்றி சீராக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின் மக்களுக்கு இந்த எரிபொருள் நிவாரணங்களை வழங்குவது அவசியமாகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Latest News
இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் அதிரடி மாற்றம்!
Local
17 June 2026
நடப்பு செம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி
Local
17 June 2026
வாய்ப்பு கிடைத்ததும் எரிபொருள் விலை குறைக்கப்படும் - நளிந்த ஜயதிஸ்ஸ
Local
16 June 2026
தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் ஜனாதிபதியிடம் கையளிப்பு: 2030க்குள் 36 பில்லியன் டொலர் இலக்கு
Local
16 June 2026
இஸ்லாமாபாத்தில் ஒவ்வொரு 4 வீடுகளிலும் ஒரு சிறுவர் தொழிலாளி: பாகிஸ்தானில் அதிர்ச்சித் தகவல்
Local
16 June 2026
SLASSCOM National Ingenuity Awards 2026 - ஹிரு தொலைக்காட்சிக்கு மீண்டும் விருது
Local
16 June 2026
வெள்ளை மாளிகையில் தாக்குதல் சதி முறியடிப்பு - பலர் கைது!
Local
16 June 2026
இலங்கை அணியில் உள்வாங்கப்பட வேண்டிய முக்கிய வீரர் குகதாஸ் மாதுலன்: லசித் மாலிங்க புகழாரம்
Local
16 June 2026
சபாநாயகரின் சகோதரரும் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகளுடன் வீதியில்!
Local
16 June 2026
இலங்கையில் முஹர்ரம் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டது!
Local
16 June 2026