General17 June 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : கோட்டாபய ராஜபக்சவின் மனு நாளை விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்திருந்த மனுவை பரிசீலனைக்காக நாளை (18) அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, அதனை நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes