இலங்கையில் டெங்கு நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக ஏடிஸ் ஈஜிப்டை (Aedes aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) எனப்படும் இரண்டு நுளம்பு இனங்கள் செயற்படுகின்றன என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி தெரிவித்துள்ளார்.
அவற்றில், ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பே டெங்கு நோயைப் பரப்பும் பிரதான நோய்க்கடத்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் டெங்கு தொற்று அதிகரிக்கும் காலப்பகுதிகளுக்கு முன்னதாகவே, இந்த நுளம்பு இனத்தின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பிற்கு தனித்துவமான இரத்தம் உறியும் இயல்பு காணப்படுவதாகவும், பொதுவாக ஒரு பெண் நுளம்பு தனது வாழ்க்கைச் சுழற்சிக்குத் தேவையான இரத்தத்தை ஒரே நபரிடமிருந்து பெற்றுக்கொள்வதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
எனினும், ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பு குறுகிய காலத்திற்குள் பல நபர்களிடமிருந்து இரத்தம் உறிஞ்சும் தன்மையைக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பு ஒரே நேரத்தில் பலருக்கு நோயைப் பரப்பும் அபாயம் அதிகரிக்கின்றது என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஏடிஸ் ஈஜிப்டை நுளம்பின் பெருக்கம் மற்றும் பரவலைத் தொடர்ந்து கண்காணித்து, அதன் இனப்பெருக்க இடங்களை அழிக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமானது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பூச்சியியல் நிபுணர் சகுந்தலா ஜானகி வலியுறுத்தியுள்ளார்.
Latest News
டெங்கு ஒழிப்பு நடவடிக்கை - மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களில் விசேட குழுக்கள் அமைப்பு
Local
18 June 2026
இயற்கை அனர்த்த பாதிப்புகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க புதிய காப்புறுதித் திட்டம்
Local
18 June 2026
மக்களை உலுக்கிய கொடூரம் : தீய ஆவியை விரட்ட மயானத்தில் புதைகுழிகளைத் தோண்டிய பேயோட்டும் குழுவினர்!
Local
18 June 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் - கைதுக்கு எதிரான கோட்டாபயவின் மனு ஒத்திவைப்பு
Local
18 June 2026
சூர்யவன்ஷி மீது நடவடிக்கையா? பிசிசிஐ விளக்கம்
Local
18 June 2026
வீசி எறிந்த மீன்களுக்குள் இருந்த ரகசியம் : கேரளக் கடலில் சிக்கிய புதிய வகை சுறா - விஞ்ஞானிகள் சாதனை!
Local
18 June 2026
மொஸ்கோ மீது யுக்ரைன் தாக்குதல்: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இலக்கு, வானூர்தி நிலையங்கள் முடக்கம்
Local
18 June 2026
பறவைக் காய்ச்சலின் தாக்கம்: அவுஸ்திரேலிய அண்டார்டிக் தீவுகளில் 13,000 க்கும் மேற்பட்ட சீல் குட்டிகள் உயிரிழப்பு
Local
18 June 2026
சமூக ஊடகப் பயன்பாட்டிற்கான குறைந்தபட்ச வயதை 15 ஆக நிர்ணயித்தது ஐக்கிய அரபு இராச்சியம்
Local
18 June 2026
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதானவரின் 16 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்
Local
18 June 2026