General19 June 2026

மஹர, கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு

கடவத்தை மத்திய அதிவேக நெடுஞ்சாலை அருகில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்டுள்ள அவசரக் கசிவு காரணமாக, மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, நாளை (20) காலை 8:00 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நீரைச் சேமித்து, சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes