International20 June 2026

ஈரான் பயணத்தில் பாகிஸ்தான் அமைச்சர்! அராக்சியுடன் முக்கிய சந்திப்பு

பாகிஸ்தான் உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சர் மோசின் நக்வி (Mohsin Naqvi) தெஹ்ரானுக்கான தனது விஜயத்தின் போது, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சியைச் (Abbas Araghchi) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஈரானிய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பகாயியை (Esmaeil Baqaei) மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த அமைச்சர் நக்வியின் இந்த உத்தியோகபூர்வ விஜயமானது, ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே தற்போது நிலவி வரும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர முயற்சிகளுக்கு இஸ்லாமாபாத் வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பின் ஒரு பகுதியாகும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes