தென்மேல் பருவமழை காரணமாக பரவி வரும் டெங்கு அச்சுறுத்தலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல், சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, நாளை மற்றும் நாளை மறுதினம், எதிர்வரும் 26 ஆம் திகதிகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த மூன்று நாட்களில் 600 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கும் வகையில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த குறுகிய கால டெங்கு ஒழிப்பு நடவடிக்கையாக, அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சுற்றறிக்கைகளை வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், முப்படைகளின் தலைமையில் கண்காணிப்புப் பிரிவு ஒன்றை நிறுவுவதற்கும், சட்ட நடவடிக்கைகளை கடுமையாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரதேச மட்டத்தில் நிறுவப்பட்டுள்ள பிரஜா சக்தி மற்றும் மக்கள் பாதுகாப்பு குழுக்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Latest News
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
23 June 2026
கடந்த காலங்களில் அரசியல் தேவைகளுக்காகவே விளையாட்டு உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன!
Local
23 June 2026
ஜோர்தானை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியா அணி வெற்றி
Local
23 June 2026
நீதித்துறையின் கட்டமைப்புச் சிக்கல்கள் குறித்து அவசர விவாதம் கோரி சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம்
Local
23 June 2026
மசகு எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி : தற்போதைய விலை விபரம் இதோ!
Local
23 June 2026
சுரேஷ் சலேயை குறிவைத்து ராஜபக்சக்களை பழிவாங்க திட்டம்!
Local
23 June 2026
களுத்துறையில் 10 இலட்சம் ரூபாய் கையூட்டல் வாங்கிய காவல்துறை பரிசோதகர் கைது!
Local
23 June 2026
யாழ். புத்தூரில் தமிழ் இராணுவ வீரருக்கு புதிய வீடு : இராணுவத் தளபதி தலைமையில் அடிக்கல் நாட்டு விழா!
Local
23 June 2026
நாளை சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் விநியோகத் தடை
Local
23 June 2026
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
Local
23 June 2026