களுத்துறை வடக்கு பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் வைத்து 10 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்ற காவல்துறை பரிசோதகர் ஒருவர், கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் களுத்துறை தெற்கு காவல்துறை நிலையத்தின் கீழ் இயங்கும் களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த (SCIB) காவல்துறை பரிசோதகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வாகனப் புலனாய்வு விசாரணை ஒன்றில் குற்றவியல் குற்றச்சாட்டுகள் இன்றி சாதாரண முறையில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து, வாகனத்தை விடுவிப்பதற்காக ஒருவரிடமிருந்து இவர் 11 இலட்சம் ரூபாயை கையூட்டலாக கோரியுள்ளார்.
இதில் முதற்கட்டமாக கடந்த மே 30ஆம் திகதி ஒரு இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட நிலையில், நேற்று இரவு எஞ்சிய 10 இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்ட போது கையூட்டல் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட காவல்துறை பரிசோதகர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.
Latest News
கடந்த வாரம் முதல் அதிகரித்த தங்க விலையின் இன்றைய நிலவரம்!
Local
23 June 2026
கடந்த காலங்களில் அரசியல் தேவைகளுக்காகவே விளையாட்டு உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன!
Local
23 June 2026
ஜோர்தானை 2–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியா அணி வெற்றி
Local
23 June 2026
நீதித்துறையின் கட்டமைப்புச் சிக்கல்கள் குறித்து அவசர விவாதம் கோரி சபாநாயகரிடம் எதிர்க்கட்சிகள் கடிதம்
Local
23 June 2026
மசகு எண்ணெய் விலை திடீர் வீழ்ச்சி : தற்போதைய விலை விபரம் இதோ!
Local
23 June 2026
சுரேஷ் சலேயை குறிவைத்து ராஜபக்சக்களை பழிவாங்க திட்டம்!
Local
23 June 2026
களுத்துறையில் 10 இலட்சம் ரூபாய் கையூட்டல் வாங்கிய காவல்துறை பரிசோதகர் கைது!
Local
23 June 2026
யாழ். புத்தூரில் தமிழ் இராணுவ வீரருக்கு புதிய வீடு : இராணுவத் தளபதி தலைமையில் அடிக்கல் நாட்டு விழா!
Local
23 June 2026
நாளை சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் விநியோகத் தடை
Local
23 June 2026
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி
Local
23 June 2026