கால்பந்து தொடரின் குழு'J' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் அல்ஜீரியா அணி 2–1 என்ற கோல் கணக்கில் ஜோர்தானை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இந்தத் தோல்வியின் மூலம் கால்பந்து தொடரில் அறிமுக அணியாகக் களம் கண்ட ஜோர்தான் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறுவது உறுதியாகியுள்ளது.
ஆட்டத்தின் முதல் பாதியில் ஜோர்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் ஜோர்தானின் நிஜார் அல்-ரஷ்தான் முதல் கோலை அடித்து தனது அணியை 1–0 என முன்னிலைப்படுத்தினார். இதனால் முதல் பாதியில் ஜோர்தான் முன்னிலையில் இருந்தது.
எனினும், இரண்டாவது பாதியில் அதிரடி காட்டிய அல்ஜீரியா அணி ஆட்டத்தை தன்வசப்படுத்தியது.
மாற்று வீரராகக் களம் புகுந்த நாதிர் பென்புவாலி 69ஆவது நிமிடத்தில் ஒரு அபாரமான ஹெடர் மூலம் கோல் அடித்து போட்டியை 1–1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 82 ஆவது நிமிடத்தில் அல்ஜீரியாவின் நட்சத்திர வீரர் அமீன் குயிரி அணியின் இரண்டாவது கோலை பதிவு செய்து 2–1 என அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
முன்னிலையை மீட்டெடுக்க ஜோர்தான் இறுதிவரை போராடியும் அல்ஜீரியாவின் பலமான தடுப்பாட்டத்தை மீறி கோல் அடிக்க முடியவில்லை.
அதன்படி அல்ஜீரியா அணி வெற்றி பெற்றுள்ளது.
Latest News
இலங்கைத் தமிழர்களுக்காகப் போராடியுள்ளேன்: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் பேச்சு
Local
23 June 2026
புதிய ‘வேதன மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழு’ தாபிப்பு : ஜனாதிபதியால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!
Local
23 June 2026
ஹஜ் பேசா விசா விவகாரம்: அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பட்டியல் என்னிடம் உள்ளது – பிரதி அமைச்சர் முனீர் முலாபர்!
Local
23 June 2026
இந்த ஆண்டுக்குள் கண்டிக்கு தொடருந்து சேவை தொடங்கப்படும் - போக்குவரத்து பிரதி அமைச்சர்!
Local
23 June 2026
தேர்தல் செலவின அறிக்கை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் பொது மன்னிப்பு கோருகின்றனர் : தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரிப்பு!
Local
23 June 2026
சீகிரிய நுழைவாயிலுக்கு முன்பாக காட்டு யானைத் தாக்குதலிலிருந்து நூலிழையில் உயிர் தப்பிய வெளிநாட்டுப் பெண்கள்
Local
23 June 2026
செங்கோலைக் கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் - சபை அமர்வில் பதற்ற நிலை
Local
23 June 2026
6 பிரதமர்களைக் கடந்து 10 டவுனிங் வீதியில் கம்பீரமாகத் தொடரும் லாரி பூனை!
Local
23 June 2026
சேவை ஏற்றுமதி மூலம் 5 பில்லியன் டொலர் வருமானத்தை இலக்கு வைக்கும் இலங்கை
Local
23 June 2026
அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு : மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நிலவரம்!
Local
23 June 2026