General23 June 2026

கடந்த காலங்களில் அரசியல் தேவைகளுக்காகவே விளையாட்டு உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன!

கடந்த காலங்களில் அரசியல் தேவைகளுக்காகவே விளையாட்டு உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூல கேள்வி நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொடவால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்களில் வலைப்பந்தாட்டம் அல்லது கிரிக்கெட் விளையாடாத இடங்களுக்குக் கூட அரசியல் தேவைகளுக்காக விளையாட்டுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.

கிராமங்களில் எதையாவது விநியோகிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவ்வாறு செய்யப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் அந்த நடைமுறையை முற்றாக மாற்றியமைத்துள்ளது.

இப்போது விளையாட்டு உபகரணங்கள், தேவை உள்ள இடங்கள் மற்றும் பாடசாலைகளை சரியாக இனங்காணப்பட்டே விநியோகிக்கப்படுகின்றது.

எம்பிக்களுக்கும் தங்களது பிரதேசங்களில் விளையாட்டை மேம்படுத்த இன்னும் பங்களிக்க முடியும் . அரசாங்கத்தின் நோக்கம் எம்பிக்களை பிரபலப்படுத்துவது அல்ல, இலங்கையில் விளையாட்டை அபிவிருத்தி செய்வதே ஆகும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes