குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் (CID) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தொடர்பான விவகாரம் மற்றும் அவரது உடல்நிலை குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்.
சுரேஷ் சலேக்கு சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மற்றும் அவரது உணவுத்தவிர்ப்பு போராட்டம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சுரேஷ் சலே அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறிய அறையில் போதிய வசதிகள் இல்லை என்றும், அவருக்குச் சித்திரவதைகள் செய்யப்பட்டதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னிலையில் சி.ஐ.டி ஒப்புக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சரவை பேச்சாளர் எ திரணியினரின் இந்த கூற்றை முற்றாக நிராகரித்துள்ளார்.
"குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் உள்ள அந்த அறையானது 2024 செப்டம்பருக்குப் பிறகு (புதிய அரசாங்கம் வந்த பிறகு) உருவாக்கப்பட்டதொன்றல்ல. அது நீண்டகாலமாக இருக்கும் ஒரு சாதாரண தடுப்புக் காவல் அறையாகும். சுரேஷ் சலேக்காக பிரத்தியேகமாக எந்தவொரு சிறிய அறையும் உருவாக்கப்படவில்லை. சட்டப்பூர்வமான தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையிலேயே அவர் அங்கு வைக்கப்பட்டுள்ளார்."
சுரேஷ் சலே கடந்த 16 நாட்களாக உணவு தவிர்ப்பில் இருப்பதால் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ஒரு மருத்துவர் என்ற ரீதியிலும் தற்போதைய அமைச்சர் என்ற ரீதியிலும் நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்தார்.
சுரேஷ் சலே வாயினால் உணவை உட்கொள்ள மறுக்கிறாரே தவிர, அவருக்கு உணவு மறுக்கப்படவில்லை. தேசிய மருத்துவமனையின் பரிந்துரைக்கு அமைய, மூக்கு வழியே செலுத்தப்பட்டுள்ள குழாய் ஊடாக அவருக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் திரவ வடிவில் வழங்கப்பட்டு வருகின்றன.
அவரது வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவை, அவரது மனைவியே அந்தக் குழாய் மூலம் அவரது வயிற்றுக்குச் செலுத்துகிறார். அது போதுமானதாக இல்லை எனில், மேலதிக உணவைக் கொண்டு வருமாறு அவரது மனைவியிடம் கூற முடியும்.
சுரேஷ் சலே தற்போதும் சுயநினைவுடன், சாதாரணமாக ஆடை அணிந்து, நடமாடும் உடல் தகுதியிலேயே உள்ளார். எனவே, அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என அமைச்சர் உறுதியளித்தார்.
சுரேஷ் சலேயை விடுவிக்கக் கோரி வெளியில் போராட்டங்களை நடத்துவதோ அல்லது ஊடக சந்திப்புகளை நடத்துவதோ அர்த்தமற்றது என அமைச்சர் குறிப்பிட்டார்.
"இங்கு பிரச்சினை அவருக்கு உணவு வழங்கப்படாதது அல்ல, அவர் சாப்பிட மறுப்பதுதான். எனவே, வெளியில் போதி பூஜைகள் நடத்துவதையோ, மேடைகள் அமைத்துக் கூச்சலிடுவதையோ விடுத்து, அவரது மனைவியும் பிள்ளைகளும் சென்று அவரைச் சாப்பிடுமாறு கூறினால் இந்தப் பிரச்சினை இப்போதே முடிவுக்கு வந்துவிடும்."
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட நாட்டின் கடந்தகால கொடூரமான குற்றச்செயல்கள் மற்றும் படுகொலைகள் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) விரிவான விசாரணைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதே ஒரு சட்டத்தை மதிக்கும் குடிமகனின் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தினார்.
Latest News
சித்துபாத்தியில் இதுவரை 409 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு; பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
Local
23 June 2026
இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும்: ஓமான் மற்றும் ஈரான் கூட்டாக அறிவிப்பு
Local
23 June 2026
ஆட்பதிவு திணைக்கள அதிகாரிகளின் பெயரில் புதிய வட்ஸ்அப் மோசடி!
Local
23 June 2026
சாதனையாளர்களுக்கு தேசிய அங்கீகாரம் - ரோஹித், மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருது
Local
23 June 2026
அரச வாகன துஷ்பிரயோகம்: பௌசிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
Local
23 June 2026
வாயால் உணவருந்த மறுப்பதே சுரேஷ் சலேயின் பிரச்சினையாகவுள்ளது- அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்
Local
23 June 2026
அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு
Local
23 June 2026
டெல்லியில் கடும் தூசிப்புயல் : சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!
Local
23 June 2026
வரி செலுத்தவில்லையா? வங்கி கணக்குகள் முடக்கப்படும் அபாயம்!
Local
23 June 2026
குருணாகல், வெல்லவ பகுதியில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிச்சூடு
Local
23 June 2026