இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 21 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.1 மில்லியனைக் கடந்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் மொத்தமாக 1,104,354 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
ஜூன் 1 முதல் ஜூன் 21 வரை மாத்திரம் 82,332 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்த மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளில் இந்தியா (31,158) முதலிடத்தில் உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியம் (6,658), சீனா(5,178) ஆகிய நாடுகள் உள்ளன.
இதேவேளை இந்த ஆண்டின் இதுவரை அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளாக இந்தியா (281,418), ஐக்கிய அரபு இராச்சியம் (104,751), ரஷ்யா(76,963) ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த ஆண்டில் பெப்ரவரி மாதத்திலேயே அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியிருந்தது.
அந்த மாதத்தில் மட்டும் 279,328 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
Latest News
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை: பிரான்ஸில் சிவப்பு எச்சரிக்கை
Local
24 June 2026
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட 3.9 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களுடன் நால்வர் கைது!
Local
24 June 2026
கோட்டாபயவின் மனு மீதான விசாரணை: ஜூலை 6ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Local
24 June 2026
கொழும்புக்கு வருகிறது மின்சார பேருந்து புரட்சி - முக்கிய கட்டம் நிறைவு!
Local
24 June 2026
நாட்டிற்கு இதுவரை 1.1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை
Local
24 June 2026
பொலன்னறுவையில் 50 ஏக்கர் காடு அழிப்பு; தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இரகசியமாக கையூட்டு பெற்றுள்ளனர்
Local
24 June 2026
உரிமைக்காக போராடினால் விவசாயி 'கசிப்புக்காரனா'? - அரசாங்கத்திற்கு விழுந்த சாட்டையடி கேள்வி!
Local
24 June 2026
"கணவனை தேடும் மனைவி கதை" : இன்பநிதியின் இன்ஸ்டா பதிவால் சர்ச்சை!
Local
24 June 2026
226 பில்லியன் ரூபாய் போதைப்பொருள் மீட்பு; நீதிமன்றத்திற்குள் நடந்த ஊழல்களை அம்பலப்படுத்தினார் அமைச்சர் ஆனந்த விஜயபால!
Local
24 June 2026
மெட்டாவின் புதிய AI ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம் : விலை எவ்வளவு தெரியுமா?
Local
24 June 2026