கொழும்பு நகரின் பேருந்து போக்குவரத்துத் துறையை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்ட 'பசுமை நகரங்கள், உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி' (GCIEP) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் UNDP இலங்கை பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது, கொழும்பில் மின்சாரப் பேருந்துகளின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதற்கான வரைபடம், பிரதி உயர்ஸ்தானிகர் தெரசா ஓமஹோனியால் (Theresa O’Mahony) கையளிக்கப்பட்டது.
அத்துடன், இலங்கையின் மின்சார போக்குவரத்து இலக்குகளை அடைவதற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஆதரவு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
இலங்கையின் தேசியக் கொள்கைகளுக்கு அமைவாக, நிலையான மற்றும் திறமையான எதிர்கால நகர்ப்புற போக்குவரத்து கட்டமைப்பை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Latest News
தமிழ் நாட்டில் யூடியூபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: உணவு பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்
Local
24 June 2026
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம்!
Local
24 June 2026
டெங்கு ஒழிப்பு - ஜனாதிபதி செயலகத்தினால் விசேட சுற்றறிக்கை வெளியீடு
Local
24 June 2026
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கப்படும் வரை 9 இலட்சம் ரூபாயில் தற்காலிக வீடுகள்
Local
24 June 2026
பிரான்ஸில் எபோலா பாதிப்பு உறுதி - கொங்கோவிலிருந்து திரும்பிய மருத்துவருக்கு தொற்று!
Local
24 June 2026
கடந்த ஆண்டை விட 7.56 சதவீத வளர்ச்சி : இலங்கையின் ஏற்றுமதி துறையில் புதிய மைல்கல்
Local
24 June 2026
சர்வதேச தரத்திற்கு ஏற்ப இலங்கைப் பணியாளர்களை உருவாக்கும் ஒருங்கிணைந்த தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
Local
24 June 2026
பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 4,302 தானசாலைகள் பதிவு
Local
24 June 2026
ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை: பிரான்ஸில் சிவப்பு எச்சரிக்கை
Local
24 June 2026
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கடத்தப்பட்ட 3.9 கோடி ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்களுடன் நால்வர் கைது!
Local
24 June 2026