General24 June 2026

ஐரோப்பாவை வாட்டும் கடும் வெப்ப அலை: பிரான்ஸில் சிவப்பு எச்சரிக்கை

ஐரோப்பாவின் பல நாடுகளை தாக்கி வரும் கடும் வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கடும் வெப்பம் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று பதிவான சராசரி 29.8 செல்சியஸ் வெப்பநிலை, பிரான்ஸ் வரலாற்றில் ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச சராசரி வெப்பநிலையாக கருதப்படுகிறது.

பாரிஸ் முதல் பிரித்தானியா வரை பல பகுதிகளில் 39 முதல் 40 செல்சியஸ் வரையிலான வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடும் வெப்பத்தால் பிரான்ஸின் மேற்கு பிராந்தியமான பிரித்தானியாவில் சுமார் 68,000 வீடுகள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் முதல் வெப்ப அலை தொடர்பான சம்பவங்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நெதர்லாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, போலந்து, குரோஷியா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கும் வெப்ப அலை பரவும் அபாயம் இருப்பதாக வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes