கொங்கோ ஜனநாயகக் குடியரசிலிருந்து (DRC) திரும்பிய மருத்துவர் ஒருவருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மனிதாபிமானப் பணியை முடித்துவிட்டுத் திரும்பிய அந்த மருத்துவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
ஐரோப்பிய மக்களுக்கு இதனால் பெரிய ஆபத்து இல்லை என்று அமைச்சு உறுதியளித்துள்ளது.
கொங்கோவில் தற்போது பரவி வரும் எபோலா பாதிப்பானது, முந்தைய எந்தவொரு எபோலா தொற்றையும் விட மிக வேகமாகப் பரவுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது.
அங்கு இதுவரை 1,094 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 277 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பாதிப்பு 'Bundibugyo' என்ற அரிதான வகை வைரஸால் ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் தொற்று கண்டறியப்பட்டமையால், இதன் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அப்திரஹ்மான் மஹமூத் தெரிவித்துள்ளார்.
"இந்த வைரஸின் பரவல் எங்களின் கட்டுப்பாட்டை விட வேகமாக உள்ளது.எனவே இதைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டியது அவசியம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் மேற்கு ஆபிரிக்கா மற்றும் கொங்கோவில் ஏற்பட்ட எபோலா பாதிப்புகள் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கிய நிலையில், தற்போதைய சூழல் உலகளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Latest News
தேர்தலில் 'அழியாத மை' நடைமுறையை நீக்குவதன் மூலம் 100 மில்லியன் சேமிப்பு!
Local
24 June 2026
சாவகச்சேரி உப தவிசாளர் கிஷோர் நீக்கப்பட்டமை அதிகார துஷ்பிரயோகம் - நாமல் குற்றச்சாட்டு
Local
24 June 2026
வேதனம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
Local
24 June 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்தில் வழங்கப்படப்போகும் விசேட வசதி
Local
24 June 2026
புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு - பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
Local
24 June 2026
"ராஜபக்சக்களின் கனவு நகரமும், சஜித்தின் பெட்டி வீடுகளுமே ஹம்பாந்தோட்டை யானை அச்சுறுத்தலுக்குக் காரணம்!"
Local
24 June 2026
எல் நினோ, லா நினா பாரிய பேரழிவாக மாறுவதற்கு முன்னர் அதனைத் தடுப்பதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
Local
24 June 2026
"க்ளீன் ஸ்ரீலங்கா என்று கூறிவிட்டு கொழும்பில் நடக்கக்கூட முடியாத அளவுக்குத் துர்நாற்றம்!"
Local
24 June 2026
பொசன் காலப்பகுதியில் மாற்றியமைக்கப்பட்ட உந்துருளிகளுக்கு தடை - காவல்துறை விசேட எச்சரிக்கை!
Local
24 June 2026
தமிழ் நாட்டில் யூடியூபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: உணவு பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்
Local
24 June 2026