General24 June 2026

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம்!

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்டு, பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், இதற்கு எதிராக 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே வாக்களித்திருந்தனர்.

இதன்படி, 103 மேலதிக வாக்குகளினால் தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes