உணவகங்கள் குறித்த விமர்சனங்களை (Food Review) மேற்கொள்ளும் யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடகச் செயற்பாட்டாளர்களுக்கு, தமிழக உணவு பாதுகாப்புத்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, இனிவரும் காலங்களில், உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்ற உணவகங்களில் மட்டுமே உணவு விமர்சனங்களை மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், உணவகங்களுக்குச் செல்லும்போது, அந்த உணவகம் உரிய உரிமம் பெற்றுள்ளதா என்பதையும், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக, பணியாளர்கள் கையுறை மற்றும் தலைக்கவசம் அணிந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்களில் வழங்கப்படும் குடிநீர் மற்றும் உணவு ஆகியவை தரமான முறையில் உள்ளனவா என்பதை ஆய்வு செய்த பின்னரே விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் செய்யப்படும் உணவு விமர்சனங்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையவை என்பதால், இத்தகைய பொறுப்புணர்வுடன் கூடிய விமர்சனங்களை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Latest News
சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணையவழியில் மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும்
Local
24 June 2026
தேர்தலில் 'அழியாத மை' நடைமுறையை நீக்குவதன் மூலம் 100 மில்லியன் சேமிப்பு!
Local
24 June 2026
சாவகச்சேரி உப தவிசாளர் கிஷோர் நீக்கப்பட்டமை அதிகார துஷ்பிரயோகம் - நாமல் குற்றச்சாட்டு
Local
24 June 2026
வேதனம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு
Local
24 June 2026
வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்தில் வழங்கப்படப்போகும் விசேட வசதி
Local
24 June 2026
புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு - பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
Local
24 June 2026
"ராஜபக்சக்களின் கனவு நகரமும், சஜித்தின் பெட்டி வீடுகளுமே ஹம்பாந்தோட்டை யானை அச்சுறுத்தலுக்குக் காரணம்!"
Local
24 June 2026
எல் நினோ, லா நினா பாரிய பேரழிவாக மாறுவதற்கு முன்னர் அதனைத் தடுப்பதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
Local
24 June 2026
"க்ளீன் ஸ்ரீலங்கா என்று கூறிவிட்டு கொழும்பில் நடக்கக்கூட முடியாத அளவுக்குத் துர்நாற்றம்!"
Local
24 June 2026
பொசன் காலப்பகுதியில் மாற்றியமைக்கப்பட்ட உந்துருளிகளுக்கு தடை - காவல்துறை விசேட எச்சரிக்கை!
Local
24 June 2026