General24 June 2026

கப்பல்களிடம் கட்டண அறவிடவில்லையென ஈரான் உறுதி; தகவல் பொய்யாயின் பேச்சுவார்த்தை முறியும் - டொனால்ட் ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கும் கப்பல்களிடம் ஈரான் எந்தவிதமான கட்டணங்களையோ, காப்பீட்டு செலவுகளையோ அல்லது வேறு எந்தவிதமான கட்டணங்களையோ கோரவோ அல்லது பெறவோ இல்லை என்று ஈரான் தன்னிடம் உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், ஈரான் அளித்துள்ள இந்தத் தகவல் பொய்யானது என்று தெரியவந்தால், பேச்சுவார்த்தைகள் உடனடியாக முடிவுக்கு வரும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரானுக்கு அமெரிக்கா எந்தப் பணமும் வழங்கவில்லை அல்லது அவர்களது முடக்கப்பட்ட பணத்தை விடுவிக்கவில்லை என்றும் டொனால்ட் ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானின் பணத்தைக் கொண்டு, அமெரிக்க விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்களிடமிருந்து சோளம், கோதுமை, சோயா உள்ளிட்ட தானியங்களை வாங்கப் போவதாகவும், ஈரானுக்குத் தேவையான உணவை அமெரிக்காவிலிருந்து மட்டுமே கொள்முதல் செய்யப் போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes